தஞ்சை பூக்காரத்தெரு பூச்சந்தை பகுதி இருபது கண் பாலத்தின் இடதுகரையில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தின் மேற்பகுதி மட்டும் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?