தெருவிளக்குகள் இல்லாத ஊர்
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள அம்மாபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் மின்கம்பங்களும் இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக தெருவிளக்குகளும் இல்லை. இதனால் பெண்கள், சிறுவர்கள் இரவு 7 மணிக்கு மேல் வெளியில் நடமாட முடியாது. இதுகுறித்து குன்னத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியாவது குன்னத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் எங்கள் ஊருக்கு மின்விளக்குகளை நட்டு தெருவிளக்குகள் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அ.மூர்த்தி,அம்மாபாளையம்.
9384720395