சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல், புதுச்சத்திரம் களங்கானி பகுதிகளில் பயணிகள் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இரவு நேரங்களில் அந்த நிழற்கூடங்கள் அருகே பயணிகள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நிழற் கூடங்கள் அருகே மின் விளக்குகளை அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், நாமக்கல்.