நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் பெரமாண்டம்பாளையம் ஊராட்சி முத்தூரிலிருந்து ஆண்டிபாளையம் செல்லும் சாலையில், வாய்க்கால் அருகே உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இந்த செடி கொடிகளை அகற்றி மின் கம்பத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.
-மணி, நாமக்கல்.