நாகை மாவட்டம் விழுந்தமாவடி துணை மின் நிலையத்தில் இருந்து வேட்டைக்காரனிருப்பு, வெள்ளபள்ளம், கோவில்பத்து,நாலுவேதவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சார வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் கடந்த 1 மாத காலமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக தினமும் 3 முதல் 4 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. ஒருசில நாட்களில் 8 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அடிக்கடி ஏற்படும் மின்தடையால் தொழில் நிறுவனங்களும் பாதிப்படைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?