ஒளிராத உயர் கோபுர மின்விளக்குகள்
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் 1-வது மண்டலம் 12 வார்டில் காளியம்மன் கோவில் முன்பு உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதுகுறித்து பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் நடவடிக்ைக எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் செல்போன் பறிப்பு, நகைபறிப்பு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இனியாவது சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் இந்த பகுதியில் எரியாத மின் விளக்குகளை எரியச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறன்.
கா.கருணாகரன், 15வேலம்பாளையம்
98941 94630