பணி முடிவடையுமா?

Update: 2022-08-29 12:47 GMT

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ள மேற்கு தெருவில் சீரற்ற மின்சார வினியோகத்தை சரி செய்யும் நோக்கத்தில் வடக்கு தெரு ஜாமியா மஸ்ஜித் பள்ளியின் மையவாடி சுற்று சுவர் அருகில் டிரான்ஸ்பார்மர்  வைப்பதற்காக மின் கம்பம் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த பணி தற்போது வரை முடிவடையாததால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே விரைந்து டிரான்ஸ்பார்மர் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்