அபாயகரமான மின்மாற்றியால் அச்சம்

Update: 2022-08-29 09:38 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வரவூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மின்மாற்றியில் இருக்கும் இரண்டு மின்கம்பங்களும் சேதமடைந்து எலும்புக்கூடு போல் காணப்படுகிறது. மேலும் மின்மாற்றியும் துருப்பிடித்து பயங்கரமான நிலையில் காணப்படுகிறது. இதில் இருந்து அடிக்கடி தீப்பொறிகள் விழுவதால் அவ்வழியாக செல்லும் மக்கள் அச்சமடைகின்றனர். அதனால் அபாயகரமான நிலையில் காணப்படும் மின்மாற்றியை அகற்றிவிட்டு, புதிய மின்மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

மேலும் செய்திகள்