கூடங்குளம் வடக்கு பகுதியில் நான்கு ரோடு சந்திப்பு பஸ் நிறுத்தம் கிழக்கு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் தாழ்வாக உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் மின் இணைப்பு பெட்டி திறந்து கிடப்பதால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின் இணைப்பு பெட்டிக்கு மூடி அமைத்து பூட்டி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-சந்திரன், கூடங்குளம்.