செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கூட் சாலை அருகே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்லும்போது வெளிச்சம் இல்லாமல் இருப்பதால் சிரமப்பட்டே பயணம் செய்கிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுவதால் மின் விளக்குகளை சரி செய்வதற்கு அதிகாரிகள் நிரந்தரமாக தீர்வு காண வேண்டும்.