சென்னை வளசரவாக்கம் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் 'பங்க்' எதிரில் உள்ள மின் கம்பம் ஆபத்தான முறையில் சாய்ந்து உள்ளது. மேலும் இந்த மின்கம்பம் அருகிலுள்ள கடையின் மீது சரிந்தும் மின் வயர்கள் வெளியில் நீட்டிக்கொண்டும் இருக்கிறது. எனவே எந்த நேரத்திலும் கீழே விழுந்து விடும் சூழலில் இருக்கும் இந்த மின்கம்பத்தை சரி செய்ய மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.