சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனி பகுதியில் உள்ள மகாத்மா காந்தி தெருவில் சில நாட்களுக்கு முன்பு மின் கம்பம் மட்டும் நடப்பட்டது. ஆனால் இப்போது வரை மின் விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரங்களில் போதிய வெளிச்சமில்லாமல் இருள் சூழ்ந்த பகுதியாக இருக்கிறது. மின்வாரியம் கவனித்து மின் கம்பத்தில் மின்விளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.