திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தை அடுத்த பாட்டைகுப்பம் பகுதியில் இருக்கும் மின் கம்பங்களில் பல மின் கம்பங்கள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் களப் பணி செய்து இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.