நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கலைநகர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள ெதருவில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே அதனை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்விளக்கை மாற்றி, புதிய விளக்கை பொருத்தி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.