மின்கம்பத்தால் விபத்து அபாயம்

Update: 2022-08-28 11:43 GMT

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் நகராட்சி கட்டிடம் அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து காணப்படுகிறது. இதனால் அந்த மின்கம்பம் தற்போது மிகவும் பலவீனமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்