நடுரோட்டில் மின்கம்பம்

Update: 2022-08-27 09:55 GMT
மூங்கில்துறைப்பட்டு அருகே ஈருவுடையாம்பட்டு மங்களம் வடக்கு தெருவில் சாலை நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்