.மதுரை மாவட்டம் முத்துப்பட்டி பெருமாள்நகா் 2வது தெருவில், 25வருடங்களுக்கு முன் இப்பகுதி வயல் காடாய் இருக்கும் பொழுது இரும்பாலான மின்கம்பங்களை அமைக்கப்பட்டது. தற்சமயம் அது அதிக மக்கள் நடமாடும் குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது. இதனால் மழை காலங்களில் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனங்கள் மின்கம்பத்தின் மீது மோதி விபத்து அபாயம் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.