நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலம்பட்டியில் பஞ்சாயத்து அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் அருகே அதிக உயர்மின் அழுத்த கொண்ட மின்கம்பி தாழ்வாக செல்கிறது. மேலும் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தாழ்வாக செல்லும் மின்கம்பியை சரி செய்யவும், செடி, கொடிகளை அகற்றவும் நடவடிக்க எடுக்க வேண்டும்.
-குமரப்பன், ஆலம்பட்டி, நாமக்கல்.