கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மாதா கோவிலுக்கு செல்லும் சாலையோரம் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லும் மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வளைந்த நிலையில் ஆபத்தாக காணப்படுகிறது. சூறாவளி காற்று வீசும்போது, அந்த மின்கம்பம் சரிந்து விழுந்து அசம்பாவிதங்களை ஏற்படுத்தலாம். எனவே பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.