தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதி பூண்டியில் இருந்து ஆர்சுத்திப்பட்டு செல்லும் சாலையில் மலையர் நத்தம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பங்களின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பங்கள் வலுவிழந்துள்ளது. இதன்காரணமாக மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சேதமடைந்த மின்கம்பங்கள் உள்ள பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பங்களை சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.