திருச்சி மணப்பாறை அருகே உள்ள வ.பெரியபட்டி ஊராட்சி, பூலாம்பட்டி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சீரான மின்சார வினியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக இப்பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படுவதுடன் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.