திருச்சி ஸ்ரீரங்கம்-கொள்ளிடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புதிய பாலத்திலுள்ள தெரு விளக்குகள் ஆரம்பம் முதல் நெம்பர் 1 டொல்கேட் ஐயன் வாய்க்கால் வரை எரிவது இல்லை. இதனால் இப்பகுதிகள் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் இந்த சாலை வழியாக பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.