நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ெடரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து இடதுபுறமாக செல்லும் ஜேக்கப் தெருவில் 286 எண் கொண்ட மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே ெதரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராபின் ஐசக், ராணித்தோட்டம்