பாகூர் தொகுதி மேல்பரிக்கல்பட்டு கிராமத்தில் பாலர் பள்ளி தெருவில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதன் அருகில் குளம் உள்ளதால் அங்கிருந்து விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர். உயர்கோபுர மின்விளக்கு எரிவதற்கு மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.