உயர்கோபுர மின்விளக்கு தேவை

Update: 2022-08-23 11:53 GMT

 கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து முருகன் குன்றம் வழியாக கன்னியாகுமரி செல்லும் நான்கு வழி சாலை உள்ளது. இந்த சாலையில் முருகன்குன்றத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் திருப்பத்தில் மின்விளக்கு அமைக்கப்படாமல் இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, அந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ஜெயலெட்சுமி சுந்தர், ஏழுசாட்டுபத்து.

மேலும் செய்திகள்