சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-08-23 11:39 GMT

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புண்ணார்குளம் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் வலதுபுறமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் மேல் பகுதி சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. இந்த கம்பத்தில் உயர் மின்அழுத்த கம்பியும் இணைக்கப்பட்டுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்