தஞ்சை ராமநாதன் ரவுண்டானாவில் இருந்து மணிமண்டபம் செல்லும் சாலையில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மேலும், போதிய வெளிச்சம் இன்றி வாகனஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இருளை பயன்படுத்தி மர்மநபர்கள் வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபடவும் வழிவகுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?