கடலூர் உப்பலவாடியில் உப்பனாற்று பாலம் கட்டப்பட்டு 10 ஆண்டுகளாகியும் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பாலம் இருள்சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அங்கு மதுபிரியர்கள் மது அருந்தி வருகின்றனர். இதை தவிர்க்க உப்பனாற்று பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.