Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Aug 2022 12:05 PM GMT
| திருவெறும்பூர்
#5645

சாலையை விரிவு படுத்த வேண்டும்

சாலை

திருச்சி மாவட்டம், திருவரம்பூர் தாலுகா, துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா வளைவு சாலையில் இருந்து அய்யம்பட்டி சாலை வரை இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 11:54 AM GMT
| நாமக்கல்
#5643

தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிதண்ணீர்

நாமக்கல்-திருச்சி சாலை என்.புதுப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்க கட்டிடத்தின் முன்பு லேசான மழை பெய்தால் கூட மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதனால் கூட்டுறவு கட்டிடத்திற்கு முன்பு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே கூட்டுறவுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழனிவேல், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 11:46 AM GMT
| பரமக்குடி
#5640

நடைபாதை ஆக்கிரமிப்பு

சாலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா மேலப்பெருங்கரை கிராமத்தில் 4 -வது வார்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பின்புறம் உள்ள பாதையை பொதுமக்கள் குடிநீர் எடுத்துவர மற்றும் பிற தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த பாதையானது ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 5:31 PM GMT
| திருப்பத்தூர்
#5583

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

திருப்பத்தூர் நகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட அப்துல் மாலிக் தெரு பள்ளிக்கூடம் அருகில் வசிக்கும் தெருக்களுக்கு சாலை வசதி கிடையாது. அங்குள்ள சாலை லேசான மழைக்கு சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் கால்வாயில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு சாலை அமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? சாமிகண்ணு, திருப்பத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 5:30 PM GMT
| திருவரங்கம்
#5582

சுரங்கப்பாதை சீரமைக்கப்படுமா?

போக்குவரத்து

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் ரெயில்வே மேம்பாலத்தின் மேல்புறம் சுரங்கபாதை உள்ளது. இதன் வழியே பெரியார் நகர், கணபதி நகர், கந்தன் நகர், தாத்தாச்சாரியார் கார்டன் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களும், பொதுமக்களும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களிலும், ஆட்டோக்களிலும் மற்றும் நடந்தும் திருவானைக்காவல் சென்று வருவதற்கு பிரதான வழியாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இவ்வழியில் மழைக்காலங்கள் வரும்போதெல்லாம் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்பதுடன் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரியாத...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 5:17 PM GMT
| சோளிங்கர்
#5581

தாசில்தார் நியமிக்க வேண்டும்

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு ஆண்டாக தாசில்தார் பணியாற்றி வந்தார். அவர் வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றி வந்த கணேசன் கூடுதல் பொறுப்பாக சோளிங்கர் தாசில்தார் பொறுப்பை கவனித்து வருகிறார். தற்போது வரை சோளிங்கருக்கு நிரந்தர தாசில்தார் நியமிக்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 4:17 PM GMT
| குன்னம்
#5553

குளம் போல் தேங்கும் மழைநீர்

மற்றவை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஒதியம் கிராமத்தில் புது காலனியில் உள்ள பொது இடத்தில் தாழ்வான பகுதியில் மழை பெய்யும் போது மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 2:56 PM GMT
| பெங்களூரு
#5535

நடைபாதை மின்கம்பத்தால் மக்கள் அவதி

நடைபாதை மின்கம்பத்தால் மக்கள் அவதிமற்றவை

பெங்களூரு தேவங்கா ஹாஸ்டல் சாலையில் சந்திப்பு பகுதியில் உள்ள நடைபாதையை தினமும் ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அந்த நடைபாதையில் நடுவே மின்கம்பம் மற்றும் இரும்பு கம்பி ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். இதனால் அவர்கள் நடைபாதையை விட்டு சாலையில் இறங்கி செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 2:56 PM GMT
| பெங்களூரு
#5534

கழிவுநீரால் துர்நாற்றம்

கழிவுநீரால் துர்நாற்றம்கழிவுநீர்

பெங்களூரு மிஷன் சாலையில் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். துப்புரவு தொழிலாளர்கள் அந்த குப்பை கழிவுகளை அகற்றினாலும், மழை காரணமாக அங்கு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால், அந்தப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்பவர்களும் மூக்கை பிடித்தபடி தான் கடந்து செல்கிறார்கள். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு குப்பை கொட்டுவதை தடுக்கவும், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 2:55 PM GMT
| பெங்களூரு
#5533

சாலை பள்ளத்தால் ஆபத்து

சாலை

பெங்களூரு சுதாமநகர் பகுதியில் குழாய்கள் பதிப்பதற்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் அந்த பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வருபவர்கள் தவறுதலாக பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 2:54 PM GMT
| பெங்களூரு
#5532

மோசமான நிலையில் சாலைகள்

சாலை

பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் சாலை குழிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 2:54 PM GMT
| பெங்களூரு
#5531

மலைபோல் கிடக்கும் குப்பை கழிவுகள்

மலைபோல் கிடக்கும் குப்பை கழிவுகள்குப்பை

பெங்களூரு சாந்திநகர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழ் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. பல நாட்கள் ஆகியும் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த குப்பை கழிவுகள் சாலையின் நடுவே சிதறி கிடக்கின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick