Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Aug 2022 11:27 AM GMT
| விழுப்புரம்
#5843

சிக்னல் அமைக்க வேண்டும்

போக்குவரத்து

திருவெண்ணெய்நல்லூர் அருகே மாமந்தூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் போக்குவரத்து சிக்னல் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 11:13 AM GMT
| செஞ்சி
#5839

குண்டும், குழியுமான சாலை

சாலை

மேல்மலையனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து அக்னிகுளம் வழியாக பச்சையம்மன் கோவில் வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சேதமடைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 11:11 AM GMT
| வானூர்
#5838

சுகாதார நிலையம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

வானூர் அருகே பொம்பூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் மேல்தளம் சேதமடைந்துள்ளதால் மழைக்காலங்களில், இந்த ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதிலும் தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 9:00 PM GMT
| உதகமண்டலம்
#5810

நீலகிரி சிவில் சப்ளை ரேஷன் கடையில் போதிய பணியாயர்கள் இல்லாததால் அவதிபடும் ரேஷன் கார்டுதாரர்கள்

மற்றவை

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் 20-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் போதிய பணியாட்கள் இல்லாததால், ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, இந்த ரேஷன் கடைகளில் கூடுதல் பணியாட்கள் நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:53 PM GMT
| பெரம்பலூர்
#5778

கிடப்பில் போடப்பட்ட தார் சாலை அமைக்கும் பணி

கிடப்பில் போடப்பட்ட தார் சாலை அமைக்கும் பணிசாலை

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் இருந்து எளம்பலூர் சாலையை இணைக்கும் வகையில் தார் சாலை அமைப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லி, கற்கள் போடப்பட்டது. ஆனால் இதுவரை தார் ஊற்றாமல் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவததோடு, அவர்களின் வாகனங்கள் பழுதாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:52 PM GMT
| ஜெயங்கொண்டம்
#5776

தடையில்லாமல் யூரியா கிடைக்க நடவடிக்கை தேவை

மற்றவை

அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் நிலக்கடலை, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட மானாவாரி பயிர்களும், காய்கறிகளும் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது மானாவாரி பயிர்களுக்கு மேலுரம் இடுவதற்கு யூரியா தேவைப்படுகிறது. தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள உரக்கடைகளில் யூரியாவிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு யூரியா கிடைக்காததால் அருகிலுள்ள பல்வேறு ஊர்களுக்கு அலைந்து யூரியா வாங்குவதற்கு சிரமப்பட்டும் யூரியா கிடைக்காமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே தற்போது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:03 PM GMT
| கரூர்
#5759

கால்நடைகளின் உடல்நிலை பாதிக்கும்

குப்பை

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகில் பிளாஸ்டிக் பைகள், வீட்டு உபயோக கழிவு பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த குப்பைகளை ஆடு, மாடுகள் கிளறி தின்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், இந்த குப்பைகள் சாலையில் சிதறி கிடக்கின்றன. எனவே இந்த குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 2:22 PM GMT
| பொள்ளாச்சி
#5750

பராமரிப்பு இல்லாத கழிப்பிடம்

மற்றவை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை க்கு சுற்றுலா பயணிகள்தம்பி செல்கின்றனர். மேலும் பூங்காவுக்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு எந்த வசதியும் செய்வதில்லை. கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல் கிடப்பதால் கடும் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பிடங்களை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 2:22 PM GMT
| கோயம்புத்தூர் வடக்கு
#5749

பஸ்கள் விட வேண்டும்

போக்குவரத்து

கோவை காந்திபுரத்தில் இருந்து காந்தி மாநகர் கணபதி மாநகருக்கு ஏராளமான பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சில நேரங்களில் அந்த பஸ்கள் முறையாக வருவதில்லை. அப்படி வந்தாலும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்ந்து வருவதால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் சிலர் அங்குள்ள வ.உ.சி நகரில் இருந்து சத்தி சாலையில் உள்ள பாரதி நகர் வரை நடந்து வந்து பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான இடைவெளியில் பஸ்களை இயக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 2:20 PM GMT
| சிங்காநல்லூர்
#5748

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் இருந்து ஸ்ரீபதி நகருக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் இந்த சாலையில் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 2:19 PM GMT
| பொள்ளாச்சி
#5747

குண்டும், குழியுமான சாலை

சாலை

பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள மேம்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையில் பாலத்தில் ஆங்காங்கே குழிகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:59 PM GMT
| கரூர்
#5746

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

கரூரில் இருந்து மதுரை செல்லும் புறவழிச்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. நீண்ட நாட்களாக அந்த குப்பைகள் அல்லப்படாமல் அப்படியே கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick