Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Aug 2022 1:25 PM GMT
| உதகமண்டலம்
#5894

பிளாஸ்டிக் கழிவுகள்

பிளாஸ்டிக் கழிவுகள்குப்பை

ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் மைநிலை மட்டம் பகுதியில் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அங்குள்ள குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் தின்பதால் அவைகளுக்கு உடல் நலன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 1:15 PM GMT
| உதகமண்டலம்
#5890

முட்புதர்கள் அகற்றப்படுமா?

முட்புதர்கள் அகற்றப்படுமா?சாலை

ஊட்டியில் இருந்து மஞ்சூருக்கு சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பதுங்கி இருந்தாலும், தெரிவது இல்லை. மேலும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை காண்பது சவாலாக இருக்கிறது. எனவே சாலையோர புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 12:59 PM GMT
| குன்னூர்
#5889

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்துக்கு இடையூறுமற்றவை

கோத்தகிரி தாசில்தார் அலுவலக கட்டிடத்தில் தாசில்தார் அலுவலகம், கோர்ட்டு, அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் அலுவலக தேவைகளுக்காக வரும் வாகனங்கள் மட்டுமின்றி பிற வாகனங்களும் அவசியமின்றி நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அரசு அதிகாரிகள் அவசர தேவைகளுக்கு வெளியே செல்ல வாகனங்களை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 12:44 PM GMT
| சேலம்-வடக்கு
#5879

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையையொட்டி ரங்கா நகருக்கு செல்லும் சாலை உள்ளது. உழவர் சந்தை அருகே இந்த சாலையின் இரு புறங்களிலும் காலை நேரத்தில் கடைக்கு வருபவர்கள் அங்கு இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இந்த வழியாக வாகனங்களில் சென்றுவர கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு சாலையோரம் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 11:48 AM GMT
| கள்ளக்குறிச்சி
#5860

புகார் பெட்டி எதிரொலி

புகார் பெட்டி எதிரொலிமற்றவை

தியாகதுருகம் அருகே பிருதிவி மங்கலம் காலனி பகுதியில் உள்ள மின்மாற்றியை சூழ்ந்து முட் செடிகள் வளர்ந்தன. இதனால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இது குறித்த படத்துடன் 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மின்மாற்றியை சூழ்ந்து வளர்ந்த முட் செடிகளை அதிகாரிகள் அகற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் 'தினத்தந்தி'க்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 11:40 AM GMT
| கள்ளக்குறிச்சி
#5858

சேதமடைந்த குழந்தைகள் மையம்

சேதமடைந்த குழந்தைகள் மையம்மற்றவை

தியாகதுருகம் அருகே வேலா குறிச்சியில் குழந்தைகள் மையம் உள்ளது. இந்த மைய கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. குறிப்பாக மேற்கூரை ஓடுகள் உடைந்துள்ளதால் மழை பெய்யும் போது தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் குழந்தைகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 11:36 AM GMT
| கள்ளக்குறிச்சி
#5854

பூங்கா சீரமைக்கப்படுமா?

பூங்கா

கல்வராயன்மலை கோமுகி அணை அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடக்கின்றன. இதனால் சுற்றுலாவுக்கு வரும் சிறுவர்கள் அந்தப் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க பூங்காவை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 11:35 AM GMT
| இரிஷிவந்தியம்
#5853

பயன்பாடின்றி சேதமடைந்த சுகாதார வளாகம்

மற்றவை

ரிஷிவந்தியம் அருகே சீர்பாதநல்லூரில் பல மாதங்களுக்கு முன்பு புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த சுகாதார வளாக கட்டிடம் தற்போது பலத்த சேதம் அடைந்து வருகிறது. எனவே சிதிலமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 11:28 AM GMT
| சங்கராபுரம்
#5850

ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

சங்கராபுரம் அருகே பவுஞ்சிப்பட்டு ஏரியை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படுவதோடு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 11:25 AM GMT
| மயிலம்
#5849

சேதமடைந்த சாலை

சேதமடைந்த சாலைசாலை

மயிலத்தில் இருந்து தென் கொளப்பாக்கம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள தார் சாலை பலத்த சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையை கடப்பதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 11:26 AM GMT
| விழுப்புரம்
#5848

அனைத்து பஸ்களும் பஸ் நிலையம் வந்து செல்லுமா?

போக்குவரத்து

திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்வதில்லை. பண்ருட்டி, விழுப்புரம், திருக்கோவிலூர் மார்க்கத்தில் இருந்து வரக்கூடிய தனியார் மற்றும் அரசு பஸ்கள் திருக்கோவிலூர் சந்திப்பு கள்ளுக்கடை மூளை வழியாக நேரடியாக சென்று விடுகின்றன. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 11:22 AM GMT
| நாமக்கல்
#5846

செல்பியால் விபத்து

மற்றவை

நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. இந்த மலைக்கோட்டை மதில் சுவர் சுமார் 5 அடி உயரம் கொண்டதாகும். இந்த நிலையில் மலைக்கோட்டைக்கு வரும் இளைஞர்கள் சிலர் மதில் சுவர் மீது ஏறி நடப்பது, அங்கு நின்று கொண்டு செல்பி எடுப்பது போன்ற சாகச நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர். இதுபோன்ற சமயங்களில் கால்தவறி கீழே விழுந்தால் மரணம் உறுதி என்பதை அறியாமல் இவ்வாறு செயல்படுகின்றனர். எனவே போலீசார் மலைக்கோட்டையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick