Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 July 2022 1:23 PM GMT
| அரவக்குறிச்சி
#5049

குண்டும், குழியுமான மண் சாலை

குண்டும், குழியுமான மண் சாலைசாலை

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள புகழூர் வழியாக ரெயில்வே பாதை செல்கிறது. இந்த ரெயில்வே பாதை வழியாக பயணிகள் ரெயில், சரக்கு ரெயில் போன்றவை அடிக்கடி சென்று வருகின்றன. இதன் காரணமாக ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு புகழூர் ரெயில்வே கேட் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மண்பாதை போடப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் ரெயில்வே கேட் பூட்டியதும் அங்குள்ள ரெயில்வே குகை பாதை வழியாக சென்று வந்தனர். இந்நிலையில் தொடர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 1:12 PM GMT
| அரவக்குறிச்சி
#5037

புகழூர் வாய்க்காலை தூர்வார வேண்டும்

புகழூர் வாய்க்காலை தூர்வார வேண்டும்மற்றவை

கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்கால் ஈரோடு மாவட்டம் காரணாம்பாளையம் காவிரி ஆற்றில் தொடங்கி கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டி அம்மன் கோவில் வழியாக மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், நத்தமேட்டுப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், என்.புதூர் வழியாக செல்கிறது. இந்நிலையில் புகழூர் வாய்க்கால் தண்ணீரில் நெடுகிலும் ஏராளமான தண்ணீர் தாமரை மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகள் முளைத்து தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் கடைமடை வரை செல்ல முடியாத சூழ்நிலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 1:07 PM GMT
| நாமக்கல்
#5033

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே தாத்தையங்கார்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து தாத்தையங்கார்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சூழல் உள்ளது. இரவு நேரங்களில் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைவதை காண முடிகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கதிர்வேல், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 12:57 PM GMT
| தொண்டாமுத்தூர்
#5028

சேறும், சகதியுமான சாலை

சாலை

கோவை உக்கடத்தில் இருந்து சுண்டக்காமுத்தூர் சாலை வழியாக பேரூருக்கு சாலை செல்கிறது. இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது மழை பெய்து வருவதால் சாலை பழுதடைந்து சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகிறார்கள். சிலர் கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 12:55 PM GMT
| திருப்பத்தூர்
#5025

ஆவின் கட்டிடத்தை திறக்க வேண்டும்

மற்றவை

ஆவின் கட்டிடத்தை திறக்க வேண்டும்திருப்பத்தூர் சின்னக்குளம் மாரியம்மன் கோவில் தெருவில் ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. அந்தக் கட்டிடம் பல ஆண்டுகளாகப் பூட்டப்பட்டுள்ளது. பூட்டப்பட்ட கட்டிடத்தை் திறந்து, சீரமைத்து அங்கு ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்ய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 12:53 PM GMT
| குன்னூர்
#5023

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

கோத்தகிரி அரவேனு பகுதியில் இருந்து அளக்கரை செல்லும் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கபடுகின்றன. இதனால் அந்த சாலையில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் சிரமதிற்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையோரம் வாகனங்களை நிறுத்தி வைப்பதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 12:52 PM GMT
| உதகமண்டலம்
#5022

தேங்கி நிற்கும் மழைநீர்

தேங்கி நிற்கும் மழைநீர்சாலை

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள உழவர் சந்தை முன்பு கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு தினந்தோறும் வந்து செல்லும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் அந்த வழியாக வாகனங்கள் சென்றால் சாலையோரம் நடந்து செல்பவர்கள் மீது தண்ணீர் தெளிக்கிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 12:50 PM GMT
| உதகமண்டலம்
#5020

அபத்தான நிலையில் உள்ள மின் பெட்டி

அபத்தான நிலையில் உள்ள மின் பெட்டிமின்சாரம்

பழைய ஊட்டி பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு செல்லும் வழியில் மின் கம்பத்தில் மின் பெட்டி மூடி இல்லாமல் உள்ளது. தினமும் அந்த வழியாக ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். யாரேனும் விளையாட்டாக அந்த மின் பெட்டியை தொட்டால், மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த மின் பெட்டிக்கு மூடி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 12:49 PM GMT
| கந்தர்வக்கோட்டை
#5019

ஆபத்தான அங்கன்வாடி கட்டிடம்

ஆபத்தான அங்கன்வாடி கட்டிடம்மற்றவை

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள குப்பையன்பட்டி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையக்கட்டிடத்தின் மேற்கூரைகளின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த கட்டிடத்தில் குழந்தைகள் இருக்கும்போது கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 12:49 PM GMT
| குன்னூர்
#5018

தெருவிளக்குகள் ஒளிருமா?

மின்சாரம்

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை காட்டெருமை, காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆகும். இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் அனைத்தும் பழுதடைந்து ஒளிராமல் உள்ளதால் பொதுமக்கள் இரவில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே தெருவிளக்குகளை முறையாக பராமரித்து ஒளிர செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 12:39 PM GMT
| திருச்சிராப்பள்ளி மேற்
#5016

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பீமநகர், நியூராஜா காலனி மற்றும் பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை இவ்வழியாக செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இப்பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளதால் இந்த பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 12:35 PM GMT
| செஞ்சி
#5014

சேதமடைந்த சாலை

சாலை

மேல்மலையனூர் அருகே வேட்டைக்காரன்பத்திலிருந்து குறிஞ்சிப்பூண்டி வழியாக ஈயக்குனம் வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick