Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Sep 2022 2:48 PM GMT
அகரன் | பெரியகுளம்
#12190

வேகத்தடைகளில் விபத்து அபாயம்

சாலை

தேனி கே.ஆர்.ஆர். நகர், என்.ஆர்.டி.நகர், சமதர்மபுரம் போன்ற பகுதிகளில் உள்ள சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற இடங்களில் வேகத்தடைகள் இருப்பதை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் அங்கு வெள்ளை நிற கோடுகள் வரைய வேண்டும். ஆனால் இப்பகுதிகளில் வெள்ளை நிறக் கோடுகள் எதுவும் வரையப்படாததால் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பகுதிகளில் போதிய விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 5:30 PM GMT
அகரன் | பெரியகுளம்
#12013

வீடுகளுக்கு புகும் கழிவு நீர்

வீடுகளுக்கு புகும் கழிவு நீர்கழிவுநீர்

தேனி பாரஸ்ட் ரோடு 3-வது தெரு மற்றும் 4-வது தெரு பகுதிகளில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும் போது மழைநீர் செல்ல வழியின்றி, சாக்கடை கழிவு நீரோடு கலந்து தெருவில் ஓடுவதோடு தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. இதனால் மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 5:29 PM GMT
அகரன் | பெரியகுளம்
#12011

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தேனியில் உள்ள ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர்மண்டிக் கிடக்கிறது. வாய்க்காலில் மழைநீர் கூட செல்ல முடியாத அளவுக்கு பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், மழைநீர் செல்ல வழியின்றி பங்களாமேடு திட்டச்சாலையோரம் காலி இடத்தில் குளம்போல் தேங்கியது. இதனால் அங்கு தற்போது நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், ராஜ்வாய்க்காலை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 4:00 PM GMT
அகரன் | பெரியகுளம்
#11760

பஸ் நிலையம் பராமரிக்கப்படுமா?

மற்றவை

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் மேல்தளத்தில் குடிநீர் தொட்டிகள் வைப்பதற்கு அமைக்கப்பட்ட கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. பராமரிப்பு இல்லாததால் அங்கு செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியும் காட்சியளிக்கிறது. எனவே செடி, கொடிகளை அகற்றி தேவையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 3:59 PM GMT
அகரன் | பெரியகுளம்
#11758

சேதம் அடைந்த சாலை

சாலை

தேனி தீயணைப்பு நிலையம் அருகில் கம்போஸ்ட் ஓடைத்தெரு செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன் ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 4:56 PM GMT
அகரன் | போடிநாயக்கனூர்
#10540

சேதம் அடைந்த மின்கம்பம்

சேதம் அடைந்த மின்கம்பம்மின்சாரம்

தேனி அருகே ஜங்கால்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சோலைத்தேவன்பட்டி வடக்கு தெருவில் உள்ள மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுக்ள் சேதம் அடைந்தும், விரிசல் விழுந்தும் காணப்படுகிறது. எனவே விபத்து எதுவும் ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 1:44 PM GMT
அகரன் | பெரியகுளம்
#10218

தகராறுக்கு வித்திடும் வாசகங்கள்

போக்குவரத்து

தேனி நகரில் இயக்கப்படும் ஏராளமான ஆட்டோக்களில் சாதிய அடையாளங்களுடனும், இருதரப்பினர் இடையே தகராறுக்கு வித்திடும் வகையிலும் சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயணம் செய்யும் ஆட்டோகளில் இதுபோன்ற வாசகங்கள் எழுத கூடாது என்று போலீசார் எச்சரித்த போதிலும் பல ஆட்டோ டிரைவர்கள் அதனைப் பின்பற்றுவது இல்லை. பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் பிரிவினை எதுவும் ஏற்படாமல் இருக்க சாதி அடையாளங்களுடன் கூடிய கயிறு கட்டவும், அதுபோன்ற கயிறுகளை பள்ளி அருகாமையில் விற்பனை செய்ய தடுக்கவும்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 10:54 AM GMT
அகரன் | பெரியகுளம்
#9491

மதுபோதையில் ஆட்டோ டிரைவர்கள்

போக்குவரத்து

தேனி நகரில் மாலை நேரங்களில் ஆட்டோ டிரைவர்கள் மது போதையில் ஆட்டோ ஓட்டுவதும், சாலையில் நின்று தகராறு செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுபோன்ற செயல்களின் மீது போலீசார் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 11:54 AM GMT
அகரன் | போடிநாயக்கனூர்
#9324

விபத்து அபாயம்

சாலை

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் இருந்து பூதிப்புரம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே குழாய் இணைப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிமெண்டு மூடிகள் சாலையை விட உயரமாக உள்ளது. மேலும் மூடிகள் உள்ள இடங்களில் சாலையும் சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இங்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:44 PM GMT
அகரன் | பெரியகுளம்
#9019

சுகாதாரமற்ற கழிப்பிடங்கள்

ட்ரெண்டிங்

தேனி பழைய பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கழிப்பிடங்களை சுகாதாரமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:42 PM GMT
அகரன் | பெரியகுளம்
#9018

புகைபிடிப்பவர்களால் பாதிப்பு

மற்றவை

தேனி பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகளில் பொது இடங்களில் புகைபிடிப்பது அதிக அளவில் உள்ளது. காலை, மாலை நேரங்களில் பஸ் நிலையங்களுக்கு மாணவ, மாணவிகள் அதிகம் வந்து செல்லும் நிலையில் புகைப்பிடிப்பவர்களால் மாணவ, மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. புகைப்பிடிப்பவர்களை பார்த்து மாணவர்களும் புகையிலை பழக்கத்துக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி பஸ் நிலைய பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு புகைபிடிப்பதை தடுக்க நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 4:31 PM GMT
அகரன் | தேனி
#6684

சாலையின் நடுவே பள்ளம்

சாலையின் நடுவே பள்ளம்சாலை

தேனி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே சாலையின் நடுவே பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் வரும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்க நேரிடுகிறது. விபத்தை தடுக்க சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தை மூடவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick