தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தகராறுக்கு வித்திடும் வாசகங்கள்
தேனி, பெரியகுளம்
தெரிவித்தவர்: அகரன்
தேனி நகரில் இயக்கப்படும் ஏராளமான ஆட்டோக்களில் சாதிய அடையாளங்களுடனும், இருதரப்பினர் இடையே தகராறுக்கு வித்திடும் வகையிலும் சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயணம் செய்யும் ஆட்டோகளில் இதுபோன்ற வாசகங்கள் எழுத கூடாது என்று போலீசார் எச்சரித்த போதிலும் பல ஆட்டோ டிரைவர்கள் அதனைப் பின்பற்றுவது இல்லை. பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் பிரிவினை எதுவும் ஏற்படாமல் இருக்க சாதி அடையாளங்களுடன் கூடிய கயிறு கட்டவும், அதுபோன்ற கயிறுகளை பள்ளி அருகாமையில் விற்பனை செய்ய தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாணவ, மாணவிகள் உட்பட பொதுமக்கள் பயணம் செய்யும் ஆட்டோகளில் சாதி மோதலை உருவாக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெறுவது பொது அமைதியை சீர்கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே ஆட்டோக்களில் இதுபோன்ற வாசகங்களை அகற்ற போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.