Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Aug 2022 6:18 PM GMT
அகரன் | போடிநாயக்கனூர்
#5593

சட்டவிரோத மதுவிற்பனை தாராளம்

மற்றவை

தேனி அருகே பூதிப்புரம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. அனுமதி பெறாத மதுபான பாரும் செயல்படுகிறது. எனவே சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 6:08 PM GMT
அகரன் | போடிநாயக்கனூர்
#5592

சேதம் அடைந்த சாலை

சேதம் அடைந்த சாலைசாலை

போடி நகராட்சி 10-வது வார்டு புதுகாலனியில் சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் இந்த வழியாக பள்ளிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் பலரும் அன்றாடம் பரிதவிக்கின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 4:41 PM GMT
அகரன் | பெரியகுளம்
#5348

மினி பஸ் சேவை திடீர் நிறுத்தம்

போக்குவரத்து

தேனி பழைய பஸ் நிலையத்தில் இருந்து என்.ஆர்.டி. நகர், சமதர்மபுரம், கே.ஆர்.ஆர். நகர், பாரஸ்ட்ரோடு பகுதிகளுக்கு மினி பஸ் சேவை இயக்கப்பட்டது. சமீபகாலமாக இந்த மினிபஸ் கே.ஆர்.ஆர். நகர் பகுதிக்கு வருவதில்லை. இதனால் இந்த பஸ் சேவையை நம்பி இருந்த மக்கள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்த மினி பஸ் மீண்டும் கே.ஆர்.ஆர். நகர் பகுதிக்கு வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 10
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 2:15 PM GMT
அகரன் | பெரியகுளம்
#5083

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?மற்றவை

தேனி கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகில் கம்பம் சாலையோர பகுதியை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எந்த பயன்பாடும் இன்றி கடந்த 2 ஆண்டுகளாக அந்த பகுதியில் தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வாகனங்களை சாலையில் நிறுத்திச் செல்கின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்து அபாயமும் உள்ளது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையோரம் வாகனங்கள் நிறுத்தம் செய்வதற்கான இடவசதி செய்து கொடுத்து வாகன நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 2:13 PM GMT
அகரன் | பெரியகுளம்
#5082

பல்லாங்குழி சாலை

சாலை

தேனி சுப்பன் தெரு திட்டச்சாலை சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 2:55 PM GMT
அகரன் | பெரியகுளம்
#4847

புதர்மண்டிய சாலை

புதர்மண்டிய சாலைசாலை

தேனி கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணை பகுதிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த சாலையின் இருபுறமும் நாணல் செடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால் சாலையின் அகலம் குறுகி உள்ளது. இந்த ஆற்றுக்கு துணி துவைக்க செல்லும் மக்கள் மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். எனவே, இந்த சாலையின் இருபுறமும் உள்ள புதர்களை அகற்றி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 2:54 PM GMT
அகரன் | போடிநாயக்கனூர்
#4845

குப்பைகளால் சுகாதாரக்கேடு

குப்பை

தேனி அருகே ஸ்ரீரெங்காபுரம் கிராமத்தில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து அழிக்கப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையோரம் எரிந்தும், எரியாமலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே, சாலையோரம் குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க வேண்டும். அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம், சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 2:09 PM GMT
அகரன் | பெரியகுளம்
#4671

ஆட்டோக்களில் ஆபத்து பயணம்

போக்குவரத்து

தேனி நகரில் ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் ஆட்டோக்களில் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். டிரைவரின் இருக்கையில் அமர்ந்தும் ஆபத்தான முறையில் மாணவ, மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். எனவே, இதுபோன்ற விதிமீறல் ஆட்டோக்களில் குழந்தைகளை அனுப்பும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதிக மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 2:08 PM GMT
அகரன் | பெரியகுளம்
#4670

பஸ்கள் நிறுத்த இடையூறு

போக்குவரத்து

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் நடைமேடையில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால், பஸ்களை நிறுத்துவதற்கு இடையூறு ஏற்படுவதால் நடைமேடையை விட்டு வெளியே பஸ்கள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. பயணிகள் பஸ்சில் ஏறுவதற்கும் சிரமம் அடைகின்றனர். எனவே, பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 12:36 PM GMT
அகரன் | பெரியகுளம்
#3882

உயர்கோபுர மின்விளக்கு இடமாற்றம் செய்யப்படுமா?

உயர்கோபுர மின்விளக்கு இடமாற்றம் செய்யப்படுமா?போக்குவரத்து

தேனி பங்களாமேடு ரவுண்டானா பகுதியில் பாரஸ்ட்ரோடு சாலையில் உயர்கோபுர மின்விளக்கு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பள்ளி வாகனங்கள் இந்த சாலையின் வளைவில் திரும்புவதற்கும் சிரமம் ஏற்படுகிறது. இந்த உயர்கோபுர மின் விளக்கை ரவுண்டானா மையப் பகுதிக்கு இடமாற்றம் செய்தால் வாகன ஓட்டிகளின் சிரமம் குறையும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 12:37 PM GMT
அகரன் | பெரியகுளம்
#3402

கண்மாயில் கொட்டப்படும் கழிவுகள்

கண்மாயில் கொட்டப்படும் கழிவுகள்குப்பை

தேனி அல்லிநகரம் சின்னக்குளம் கண்மாயில் கட்டிட கழிவுகள், குப்பைகள் போன்றவை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் கண்மாய் மாசுபட்டு வருகிறது. எனவே கண்மாய்க்குள் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கண்மாய்க்குள் குவிந்துள்ள கட்டிட கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 12:35 PM GMT
அகரன் | பெரியகுளம்
#3401

சிக்னலை மறைத்த மின்கம்பம்

சிக்னலை மறைத்த மின்கம்பம்மின்சாரம்

தேனியில் மதுரை சாலையின் மையப் பகுதியில் புதிதாக மின்கம்பங்கள் நட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மதுரை சாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு சிக்னல் விளக்கை மறைக்கும் வகையில் மின்கம்பம் நடப்பட்டுள்ளது. விபத்து தடுப்பு நடவடிக்கையாக மஞ்சள் விளக்கு ஒளிரும் இந்த சிக்னல் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது சிக்னலை மறைத்து மின்கம்பம் நடப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவ, மின்கம்பம் அல்லது சிக்னல் ஆகியவற்றில் ஒன்றை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick