Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Aug 2022 2:43 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8732

கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

பெங்களூரு கொத்திகெரே பகுதியில் சாலையோரம் கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வடிகால் வழியாக கழிவுநீர் கடந்த சில நாட்களாக வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவுநீர் வடிகாலை சீரமைத்து கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 2:43 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8731

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்கழிவுநீர்

பெங்களூரு ராஜாஜிநகர் 6-வது பிளாக் பகுதியில் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியின் எதிரே சாலையில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை சீர்செய்து கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 2:43 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8730

கேட்பாரற்று கிடக்கும் சரக்கு வேன்

கேட்பாரற்று கிடக்கும் சரக்கு வேன்மற்றவை

பெங்களூரு காமாட்சி பாளையா போலீஸ் நிலையம் அருகே சாலையின் ஓரத்தில் சேதமடைந்த ஒரு சரக்கு வேன் நிறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட சரக்கு வேன் தற்போது பழுதடைந்த நிலையில் அப்புறப்படுத்தாமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சரக்கு வேன் அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 2:43 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8729

குண்டும், குழியுமான சாலை

சாலை

பெங்களூரு கோரகுண்டே பாளையாவில் இருந்து மைசூரு ரோடு செல்லும் வெளிவட்ட சாலையை வாகன ஓட்டிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அந்த சாலையில் ஆங்காங்கே குண்டும், குழிகளுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:48 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8526

சாலையின் மோசமான நிலை

சாலையின் மோசமான நிலைசாலை

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பழைய மங்கமனபாளையா 1-வது கிராசில் உள்ள உள்ள சாலை மிக மோசமாக உள்ளது. அதாவது அந்த சாலை குண்டு, குழியுமாக காட்சி அளித்து வருகிறது. அந்த சாலையில் தற்சமயம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் இரவில் அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தட்டுதடுமாறி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சில இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து உள்ளனர். ஆனாலும் அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:48 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8524

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகுப்பை

பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையம் செல்லும் பகுதியில் சாலையோரம் குப்பை குவிந்து கிடக்கிறது. அந்த குப்பையை கால்நடைகள் கிளறி சாலையில் போட்டு செல்கின்றன. இதனால் சாலை வரை குப்பை பரவி கிடக்கிறது. குப்பையில் பல்வேறு கழிவுகள் இருப்பதால் தூர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. பஸ்களில் செல்பவர்கள் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்கின்றனர். சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:47 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8523

நடைபாதையில் குவிந்து கிடக்கும் குப்பை

நடைபாதையில் குவிந்து கிடக்கும் குப்பைகுப்பை

பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியின் முன்பு உள்ள நடைபாதையில் குப்பை மலைபோல குவிந்து கிடக்கிறது. குப்பைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுப்பது இல்லை. தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கும் சூழல் உள்ளது. இதனை தடுக்க குப்பையை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:47 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8521

பொது இடத்தில் எரிக்கப்படும் கழிவுகள்

மற்றவை

பெங்களூரு ஆஸ்டின் டவுன் லிட்டன் ரோட்டில் அரசு உருது பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் எதிரே உள்ள பொது இடத்தில் சிலர் பல்வேறு கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து வரும் புகையால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பொது இடத்தில் கழிவுகளை எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:47 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8519

சாலை பள்ளம் மூடப்படுமா?

சாலை

பெங்களூரு சககாரநகர் 13-வது மெயின் ரோடு 11-வது கிராசில் உள்ள சாலையில் சில இடங்களில் திருப்பத்தில் பள்ளம் உள்ளது. இதனால் இரவில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் வாகனங்களை இறக்கும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் சாலை பள்ளம் மூடப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:58 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8372

ஜல்லிகற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை

சாலை

பெங்களூரு எச்.எஸ்.ஆா். லே-அவுட் 1-வது கிராஸ் 24-வது மெயின் ரோடு கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக்கு சேதமடைந்துள்ளது. இதனால் அந்த சாலையில் உள்ள ஜல்லிகற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், அந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:57 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8371

சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு மேஜர் உன்னிகிருஷ்ணன் சாலையில் எஸ்.பி.ஐ. மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளன. இந்த சாலையை அந்த பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டன. பல நாட்கள் ஆகியும் அந்த பள்ளங்கள் மூடப்படாததால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:57 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8369

சிதிலமடைந்த நடைபாதை சீரமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு பீனியா 2-வது ஸ்டேஜ் பகுதியில் ஜாலஹள்ளி கிராஸ் உள்ளது. அந்த பகுதியில் உள்ள சாலையின் ஓரங்களில் உள்ள நடைபாதையை அந்த பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அந்த சாலையில் உள்ள நடைபாதை சேதமடைந்துள்ளது. இதனால் நடைபாதையை விட்டு சாலையில் இறங்கி செல்லும் பாதசாரிகள், அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரால் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick