Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Aug 2022 2:51 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#9841

சாலை பணிகள் முடிக்கப்படுமா?

சாலை பணிகள் முடிக்கப்படுமா?சாலை

பெங்களூரு கெம்பேகவுடா சாலையில் உப்பார்பேட்டை போலீஸ் நிலையம் பகுதியில் சீர்மிகுநகர திட்டத்தின் கீழ் சாலை பணிகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதுடன், சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பணிகளை முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:10 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#9237

நடைபாதையின் அவல நிலை

நடைபாதையின் அவல நிலைமற்றவை

பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த நடைபாதையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:10 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#9236

நடைபாதையில் நிற்கும் இருசக்கர வாகனங்கள்

நடைபாதையில் நிற்கும் இருசக்கர வாகனங்கள்மற்றவை

பெங்களூரு யாதவா கல்லூரி சாலையில் இருந்து நேரு சர்க்கிள் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் அருகே உள்ள நடைபாதையை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். கடந்த சில வாரங்களாக அந்த நடைபாதை பகுதியில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:10 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#9235

தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

பெங்களூரு பனத்தூர் அருகே போகனஹள்ளி பகுதியில் சாலையோரம் கழிவுநீர் வடிகால் செல்கிறது. இந்த வடிகால் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், அந்த பகுதியில் கொசுகள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த வடிகாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:10 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#9234

சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?ட்ரெண்டிங்

பெங்களூரு ரேஸ் கோர்சில் இருந்து சேஷாத்திரிபுரம் செல்லும் யாதவா கல்லூரி சாலையின் சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், அடிக்கடி அந்த பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலை பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2022 4:10 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#9233

சேதமடைந்த பஸ் நிறுத்த நடைபாதை

மற்றவை

பெங்களூரு சிக்கலசந்திரா அருகே டெலிகாம் லேஅவுட் பகுதியில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை அந்த பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் என பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பகுதி தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் கற்கள் உடைந்து சிதறி கிடக்கின்றன. இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பஸ் நிறுத்தத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:57 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8934

வெளிவட்ட சாலையின் மோசமான நிலை

வெளிவட்ட சாலையின் மோசமான நிலைசாலை

பெங்களூரு கோரகுண்டேபாளையாவில் இருந்து மைசூரு ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வெளிவட்ட சாலை செல்கிறது. இந்த வெளிவட்ட சாலையில் காமாட்சிபாளையா பகுதியில் சாலை மிக மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. அதாவது சாலை பாதி காணாமல் போய் உள்ளது. அந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். சாலையின் அவல நிலையால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:56 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8932

இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டி கடிக்கும் தெருநாய்கள்

இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டி கடிக்கும் தெருநாய்கள்மற்றவை

பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த தெருநாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வீடுகள் முன்பு விளையாடும் குழந்தைகளையும் தெருநாய்கள் விரட்டுகின்றன. தெருநாய்கள் விரட்டுவதால் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்பவர்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதனால் தெருக்களில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:56 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8931

ஏரிக்கரையில் குவிந்து கிடக்கும் குப்பை

குப்பை

பெங்களூரு ஜே.பி.நகரில் சுஞ்சகட்டா ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. குப்பை கழிவுகளில் இருந்து பயங்கர தூர்நாற்றம் வீசுவதால் ஏரிக்கு வருபவர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. ஏரிக்கு வருபவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஏரிக்கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:56 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8930

மாநகராட்சி குப்பை வாகனம் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு புலிகேசிநகர் ஆஷயா ரோட்டில் உள்ள ஒரு நடைபாதையில் மாநகராட்சி குப்பை வாகனம் கடந்த 2 ஆண்டுகளாக கவிழ்ந்து கிடக்கிறது. விபத்தில் சிக்கிய அந்த குப்பை வாகனத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த நிலை உள்ளது. பாதசாரிகள் நிலையை கருத்தில் கொண்டு அந்த குப்பை வாகனம் அகற்றப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:55 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8929

5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை

சாலை

பெங்களூரு பனத்தூர் போகனஹள்ளி பகுதியில் உள்ள சாலை கடந்த 5 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சீரமைக்கப்படாமல் உள்ள அந்த சாலை தற்போது சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்கின்றன. இதனால் சேற்றில் வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலை உள்ளது. அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 2:44 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8734

வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளை

வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளைட்ரெண்டிங்

பெங்களூரு மைசூரு ரோடு மெட்ரோ நிலையத்தில் இருந்து கோரகுண்டே பாளையா செல்லும் வெளிவட்ட சாலையில் வழிகாட்டி பலகை உள்ளது. அந்த பலகையை மறைக்கும் வகையில் அதன் அருகில் மரக்கிளை ஒன்று வளர்ந்திருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் வழகாட்டி பலகையை காண முடியவில்லை. எனவே போக்குவரத்து அதிகாரிகள் அந்த வழிகாட்டி பலகை தெரியும் வண்ணம் மரக்கிளையை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick