Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Aug 2022 2:53 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10495

சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீர்

சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீர்கழிவுநீர்

பெங்களூரு பேகூர் கிளாசிக் பைரடேஸ் லே-அவுட்டில் சாலையின் மீது சாக்கடை கால்வாய் மூடி உள்ளது. அந்த மூடி தற்போது உடைந்து கிடக்கிறது. இதனால் சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு உடைந்து கிடக்கும் சாக்கடை கால்வாய் மூடி சரிசெய்யப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:52 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10492

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்மற்றவை

பெங்களூரு பன்னரகட்டா பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. சாலையில் குறுக்கே அங்கும், இங்குமாக செல்லும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயமும் உள்ளது. மேலும் சாலையின் குறுக்கே மாடுகளால் படுத்து கொள்வதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:52 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10491

சிமெண்ட் சிலாப்புகள் இன்றி காணப்படும் சாக்கடை கால்வாய்

மற்றவை

பெங்களூரு விட்டசந்திரா ரோட்டில் சாக்கடை கால்வாய்க்கு மேல் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது சிமெண்ட் சிலாப்புகள் இன்றி சாக்கடை கால்வாய் திறந்து கிடக்கிறது. மிகவும் குறுகலான சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் சாக்கடை கால்வாயில் பாயும் நிலை உள்ளது. விபத்துகள் ஏற்படும் முன்பு சாக்கடை கால்வாய் மீது சிமெண்ட் சிலாப்புகள் அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 3:10 PM GMT
பொதுமக்கள் | சிக்கமகளூரு
#10262

ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணி

ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணிமற்றவை

சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா கும்பலடிக்கே கிராமத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளுக்காக சாலையோரம் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அந்த சாலையை பயன்படுத்துவோர் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 3:09 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10261

சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு லிங்கராஜபுரம் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகே உள்ள சாலையை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த சிரமப்படுகின்றனர். மேலும் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 3:09 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10260

கடும் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து ஒகலிபுரம் செல்லும் சாலையில் பெட்ரோல் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் ஒன்று உள்ளது. இந்த சிக்னல் பகுதியில் கடந்த 10 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை கடக்க சுமார் 10 நிமிடங்கள் காத்து நிற்க வேண்டி உள்ளது. மேலும் அவசரமாக செல்லும் ஆம்புலன்சுகள் போக்குவரத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த பகுதியில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 3:09 PM GMT
பொதுமக்கள் | சித்ரதுர்கா
#10259

பாழடைந்த பயணிகள் நிழற்குடை

பாழடைந்த பயணிகள் நிழற்குடைமற்றவை

சித்ரதுர்கா டவுன் ஐ.யு.டி.சி. பகுதியில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிழற்குடை சேதமடைந்து உள்ளது. இதனால் பஸ்சுக்காக வரும் பொதுமக்கள் வெயில், மழையில் காத்து நிற்க வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நிழற்குடையை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 3:09 PM GMT
பொதுமக்கள் | தாவணகெரே
#10258

ஆபத்தான சாலை குழி மூடப்படுமா?

ஆபத்தான சாலை குழி மூடப்படுமா?போக்குவரத்து

தாவணகெரே மாவட்டம் பசவபட்டினம் அருகே நெடுஞ்சாலையில் குழி ஏற்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையை கனரக வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றன. அந்த குழியை அடையாளம் காட்டும் விதமாக அங்கு மரத்துண்டு நிறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அந்த குழியை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 2:52 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#9847

நடைபாதையில் நிற்கும் போலீஸ் வாகனம்

மற்றவை

பெங்களூரு ஹெப்பால் மெயின் போலீஸ் நிலையம் அருகே நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். கடந்த சில நாட்களாக அந்த நடைபாதையின் குறுக்கே போலீஸ் வாகனம் நிறுத்தப்படுகிறது. இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி செல்ல வேண்டி உள்ளது. அப்போது அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் போலீஸ் வாகனம் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 2:52 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#9846

தெருநாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி

தெருநாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதிட்ரெண்டிங்

பெங்களூரு விதான சவுதா மேற்கு நுழைவு பகுதி அருகே தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் வரும் வாகனங்களின் குறுக்கே நாய்கள் செல்வதால் விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்துகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 2:52 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#9844

வேகத்தடைகளால் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

பெங்களூரு ஹெப்பால் காபி வாரியம் அருகே உள்ள சாலையை வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அடிக்கடி அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையை கடக்க வாகன ஓட்டிகளுக்கு நீண்ட நேரம் ஆகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வேகத்தடைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 2:51 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#9843

நடைபாதையின் அவல நிலை

நடைபாதையின் அவல நிலைமற்றவை

பெங்களூரு நகரத்பேட்டை பகுதியில் சிக்னல் அருகே நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை பாதசாரிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபாதை சீரமைப்பு பணிகள் தொடங்கியது. பல நாட்களாகியும் அந்த பணிகள் நிறைவடையவில்லை. இதனால் நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick