Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Aug 2022 3:03 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10908

தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

பெங்களூரு ஜே.பி.நகர் எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் சாலையோரம் குப்பை கழிவுகள் வீசப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் மலை போல் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. மேலும், குப்பைகள் சாலையில் சிதறுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, மீண்டும் அங்கு குப்பைகளை வீசாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 3:03 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10907

போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் எந்திரம்

போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் எந்திரம்போக்குவரத்து

பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலையம் எதிரே சாலையோரம் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தார் சாலை அமைக்கும் எந்திரம் நிறுத்தப்பட்டுள்ளது. பல நாட்கள் ஆகியும் அகற்றப்படாத இந்த எந்திரத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த எந்திரத்தை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 3:03 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10906

போக்குவரத்து சீரமைக்கப்படுமா?

போக்குவரத்து

பெங்களூரு ரிச்மண்டு பார்க் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. அதிகாரிகள் அதை கண்டு கொள்ளவில்லை. அவசர வேலையாக செல்பவர்கள் போக்குவரத்தில் சிக்குவதால் அவதி அடைகின்றனர். எனவே போக்குவரத்து அதிகாரிகள் அந்த பகுதியில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 3:03 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10905

குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

குப்பை

பெங்களூரு கே.ஆர். லே-அவுட் பகுதியில் டாக்டர் புனித்ராஜ் குமார் சாலையில் பொதுமக்கள் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. மேலும், அங்கு கிடக்கும் குப்பை கழிவுகள் பல நாட்கள் ஆகியும் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 3:03 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10904

பாதசாரிகளை அச்சுறுத்தும் மின்இணைப்பு பெட்டி

பாதசாரிகளை அச்சுறுத்தும் மின்இணைப்பு பெட்டிமற்றவை

பெங்களூரு மல்லேசுவரம் மார்கொசா சாலையில் சிக்னல் ஒன்று உள்ளது. இந்த சிக்னல் அருகே உள்ள நடைபாதையை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையில் உள்ள மின்இணைப்பு பெட்டியும், அதன் மேல் தொங்கும் மின்வயர்களும் பாதசாரிகளை அச்சுறுத்தி வருகிறது. பாதசாரிகள் செல்லும்போது தவறுதலாக அந்த மின்வயர்கள் அறுந்து விழுந்தால், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மின்சாரத்துறை அதிகாரிகள் அந்த மின்இணைப்பு பெட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:02 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10689

நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 11-வது மெயின், 4-வது பிளாக் பகுதியில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் உள்ள கடையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த நடைபாதையில் மரக்கம்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், கட்டுமான பொருட்கள் போடப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:02 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10688

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

பெங்களூரு ஜே.பி.நகர் 6-வது ஸ்டேஜ் சிந்தூர் திருமண மண்டபம் எதிரே உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியினர் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:02 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10687

மலைபோல் கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு ஜெயநகர் பகுதியில் கிருஷ்ண சேவக்சேத்திரா ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் எதிரே உள்ள பகுதியில் பொதுமக்கள் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் மலை போல் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:01 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10686

நடைபாதைகள் இல்லாத சாலை

மற்றவை

பெங்களூரு மாரப்பா கார்டன் பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. அந்த மசூதிக்கு செல்லும் சாலையில் இருபுறங்களிலும் நடைபாதைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் சாலைகளில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:01 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10685

சாலையோரம் கிடக்கும் சாக்கடை கழிவுகள்

சாலையோரம் கிடக்கும் சாக்கடை கழிவுகள்கழிவுநீர்

பெங்களூரு ஜே.பி.நகர், கனகபுரா மெயின் சாலையில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சாக்கடை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:54 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10497

சாலையில் முறிந்து கிடக்கும் மரக்கிளை

சாலையில் முறிந்து கிடக்கும் மரக்கிளைமற்றவை

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 7-வது பேசில் நடைபாதையையொட்டி ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து உள்ளன. அந்த மரக்கிளைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதசாரிகளுக்கும் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. முறிந்து கிடக்கும் மரக்கிளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:53 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#10496

சாலை பள்ளம் மூடப்படுமா?

சாலை பள்ளம் மூடப்படுமா?மற்றவை

பெங்களூரு சிங்கசந்திரா மணிப்பால் கன்ட்ரி சாலையில் பள்ளம் விழுந்து உள்ளது. ஆனால் அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்காமல் அதன்மீது இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்து உள்ளனர். இதனால் இரவில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அந்த இரும்பு தடுப்பு மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் பள்ளத்தை உடனடியாக மூடிவிட்டு இரும்பு தடுப்பு கம்பியை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick