Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Aug 2022 3:57 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8368

சாலையில் சிதறி கிடக்கும் கண்ணாடி துகள்கள்

போக்குவரத்து

பெங்களூரு பனசங்கரி பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்தின் கண்ணாடி உடைந்து சாலை முழுவதும் சிதறியது. தற்போது அந்த சாலை முழுவதும் கண்ணாடி துளிகள் சிதறிகிடக்கின்றன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையில் கிடக்கும் கண்ணாடி துகள்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:57 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8367

சாலையின் நடுவே இரும்பு கம்பி

மற்றவை

பெங்களூரு சேஷாத்திரிபுரம் சாலையில் இருந்து மெஜஸ்டிக் ரெயில் பஸ் நிலையம் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் அருகே உள்ள சாலையின் நடுவே இரும்பு கம்பி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் அதில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த இரும்பு கம்பியை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 3:56 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8163

குழாய்கள் அகற்றப்படுமா?

குழாய்கள் அகற்றப்படுமா?மற்றவை

பெங்களூரு கலாசிபாளையாவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக பூமிக்கு அடியில் பதிக்க ராட்சத குழாய்கள் கொண்டு வரப்பட்டு சாலையோரம் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் சாலையோரம் வைக்கப்பட்ட ராட்சத குழாய்கள் அகற்றப்படவில்லை. இதனால் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதால் குழாய்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 3:56 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8162

சாலையோரம் நிறுத்தப்படும் கார்கள்

போக்குவரத்து

பெங்களூரு கே.ஆர்.புரம் ஐ.டி.ஐ. கேட் பகுதியில் கார்கள் சாலையோரம் இருபுறமும் சிலர் நிறுத்தி செல்கின்றனர். அந்த சாலை குறுகலாக இருப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 3:55 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8161

ஆட்டோ அகற்றப்படுமா?

ஆட்டோ அகற்றப்படுமா?மற்றவை

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் பகுதியில் விபத்தில் சிக்கிய ஒரு ஆட்டோ சில நாட்களாக நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த ஆட்டோவால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பல முறை கூறியும் ஆட்டோவை அகற்ற யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்க அந்த ஆட்டோவை அதிகாரிகள் அகற்றுவார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 3:55 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#8160

நடைபாதையில் சிலாப்புகள் வைப்பது எப்போது?

மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக் 65-வது கிராசில் உள்ள நடைபாதையை சீரமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதற்காக நடைபாதையில் இருந்த சிமெண்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நடைபாதை சீரமைப்பு பணி முடிந்ததும் சிமெண்டு சிலாப்புகளை சில இடத்தில் வைக்காமல் விட்டு உள்ளனர். அங்கு சிமெண்டு சிலாப்புகள் வைக்கப்படுவது எப்போது?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:22 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7926

நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்

நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்மற்றவை

பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் காயத்ரி கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே உள்ள சாலையில் உள்ள வீடுகளுக்குள் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் தேங்கிய மழைநீரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:22 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7925

சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு டாடாநகர் பகுதியில் பெஸ்காம் அலுவலகம் அருகே உள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:22 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7924

நடைபாதையின் அவல நிலை

நடைபாதையின் அவல நிலைமற்றவை

பெங்களூரு ஒகலிபுரத்தில் இருந்து மெஜஸ்டிக் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அடியில் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த நடைபாதையில் குப்பை கழிவுகள் வீசப்படுவதுடன், சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நடைபாதையில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:22 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7923

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு நாகரபாவி 12-வது பிளாக் பகுதியில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அருகில் அந்த பகுதியினர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. மேலும், அந்த குப்பைகளை கிளறும் மாடுகள் அவற்றை சாலையில் இழுத்து போடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அகற்றவும், மீண்டும் அந்த பகுதியில் குப்பைகளை வீசாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:21 PM GMT
பொதுமக்கள் | கோலார்
#7922

புதர்மண்டி கிடக்கும் பூங்கா சீரமைக்கப்படுமா?

புதர்மண்டி கிடக்கும் பூங்கா சீரமைக்கப்படுமா?பூங்கா

கோலார் தங்கவயல் சுரங்க குடியிருப்பு பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்கா பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பூங்கா முழுவதும் புதர்மண்டி கிடப்பதால் பாம்பு போன்ற விஷபூச்சிகள் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பூங்காவை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 3:25 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7531

சட்டவிரோத பேனர்கள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு புலிகேசிநகர் செயின்ட் ஜான்ஸ் சர்ச் ரோட்டில் அரசியல் கட்சி தலைவர்களின் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டும் பேனர் வைக்க மாநகராட்சி அனுமதி கொடுத்து உள்ளதா என்று தெரியவில்லை. பேனர்களால் உயிரிழப்பு ஏற்படும் முன்பு பேனர்களை அதிகாரிகள் அகற்றுவார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick