Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Aug 2022 3:25 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7530

நடைபாதையில் கொட்டப்பட்டு இருக்கும் குப்பை

குப்பை

பெங்களூரு சம்பங்கிராம் நகர் ராஜாராம் மோகன் ராய் ரோட்டில் உள்ள நடைபாதையில் குப்பை கொட்டப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் குப்பையில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகளை கடித்து வருகின்றன. அந்த குப்பையை அகற்றி நடைபாதையை சுத்தமாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 3:25 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7529

சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலை

சாலை

பெங்களூரு பேகூர் விட்டசந்திரா பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் 6-வது கிராஸ் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் அந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் சேற்றில் சிக்கி வருகின்றன. சேற்றில் சிக்கும் வாகனங்களை கனரக எந்திரங்கள் உதவியுடன் தான் மீட்க வேண்டி உள்ளது. சேறு, சகதிகளை அகற்றிவிட்டு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 3:24 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7528

சாலை பள்ளம் மூடப்படுமா?

சாலை

பெங்களூரு மிஷன் ரோட்டில் சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளம் விழுந்து உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக வரும் போது பள்ளத்தில் வாகனங்களை இறக்கினால் விபத்தில் சிக்கி உயிரை விடும் அபாயம் உள்ளது. உயிர்பலி ஏற்படும் முன்பு சாலை பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 3:24 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7527

குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பை

குப்பை

பெங்களுரு ஹெப்பால் சோழநாயக்கனஹள்ளி படேல் முனியப்பா லே-அவுட் பகுதியில் ஒரு காலி நிலம் உள்ளது. அந்த நிலத்தில் குடியிருப்புவாசிகள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் குடியிருப்பில் பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:01 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7269

நடைபாதையில் கிடக்கும் ஓட்டல் கழிவுகள்

நடைபாதையில் கிடக்கும் ஓட்டல் கழிவுகள்ட்ரெண்டிங்

பெங்களூருவில் சாந்திநகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்த பகுதியில் இருந்து லால்பாக் பூங்கா செல்லும் சாலையில் உள்ள நடைபாதையை அந்த பகுதியினர், மற்றும் வெளியூர்களுக்கு பஸ்சில் செல்ல வரும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையில் ஓட்டலில் உள்ள எச்சில் இலைகள், காய்கறி கழிவுளை வீசி சென்றுள்ளனர். அது மலைபோல் குவிந்து கிடக்கிறது. அதை அந்த பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள் தின்றுவிட்டு, சாலையில் கிளறிவிடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:00 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7267

சேதமடைந்த போக்குவரத்து சிக்னல்

சேதமடைந்த போக்குவரத்து சிக்னல்போக்குவரத்து

பெங்களூரு ஹெப்பால்-வீரன்னபாளையா செல்லும் சாலையில் ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியின் அருகே போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக அந்த போக்குவரத்து சிக்னல் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த போக்குவரத்து சிக்னலை சரிசெய்து, விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:00 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7266

சேதமடைந்த புதிய நடைபாதை

மற்றவை

பெங்களூரு சேஷாத்திரிபுரம் பகுதியில் உள்ள இணைப்பு சாலையின் ஓரங்களில் நடைபாதைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அந்த நடைபாதைகளில் போடப்பட்டுள்ள பேவர் பிளாக்குகள் சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நடைபாதையை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:00 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7265

நடைபாதையில் கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு ஜெயநகர் 9-வது மெயின் ரோடு பகுதியில் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியின் அருகே நடைபாதையில் மரம் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அந்த மரத்தில் அருகில் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் அந்த நடைபாதை அசுத்தமாக இருப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் அவதிஅடைகின்றனர். எனவே நடைபாதையை சுத்தமாக வைத்து, பாதசாரிகள் சிரமம் இன்றி நடந்து செல்ல அதிகாரிகள் வழிவகை செய்வார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 2:59 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#7264

பஸ் நிறுத்தம் அருகே பெரிய பள்ளம்

சாலை

பெங்களூரு நந்தினி லே-அவுட் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அதன் அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல், அதிவேகமாக வருவதால், பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடித்து, பள்ளத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 3:01 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#6836

நடைபாதையில் கட்டிட கழிவுகள் வீச்சு

மற்றவை

பெங்களூரு எச்.ஏ.எல். பழைய விமான நிலையம் செல்லும் சாலையில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதை அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த நடைபாதையில் ஜல்லி கற்கள், மணல் போன்ற கட்டிட பொருட்கள் போடப்பட்டுள்ளன. மேலும் சில கட்டிட கழிவுகளும் அங்கு வீசப்பட்டுள்ளன. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் தவித்து வருகின்றனர். மேலும், அவர்கள் நடைபாதையை விட்டு சாலையில் இறங்கி செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 3:01 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#6835

சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு பானசாவடி ரெயில் நிலையம் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை கழிவுகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. பணிகள் நிறைவடைந்த நிலையில் அந்தகழிவுநீர் வடிகால் பகுதிகள் முழுமையாக சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால், அங்கு மீண்டும் குப்பை கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவேசம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 3:01 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#6834

சாலையில் கிடக்கும் மரக்கிளைகள்

சாலையில் கிடக்கும் மரக்கிளைகள்போக்குவரத்து

பெங்களூரு சேஷாத்திரிபுரம் பகுதியில் கர்நாடக குடிசை மாற்று வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே உள்ள சாலையில் அந்த பகுதியினர் மரக்கிளைகளை வெட்டி போட்டுள்ளனர். இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் மரக்கிளைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick