13 Oct 2024 12:00 PM GMT
#50513
ஆபத்தான கழிவுநீர் கால்வாய் மூடி
குரோம்பேட்டை
தெரிவித்தவர்: ஜெகநாதன்
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி சா்வீஸ் ரோடு பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. சாலையின் நடுவில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் புதிய கழிவுநீர் கால்வாய் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.