7 July 2024 2:26 PM GMT
#48081
கழிவுநீர் கால்வாய் வேண்டும்
ஊரப்பாக்கம்
தெரிவித்தவர்: சமுக ஆர்வலர்
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் மேற்கு அஞ்சுகம் நகர், முத்து மாரியம்மன் கோவில் அருகில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதியில் அதிகமான மக்கள் வசிப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகமாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அந்த பகுதியில் உள்ள கழிவுநீரை அகற்றி, கழிவுநீர் பிரச்சினையிலிருந்து விடுபட கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.