Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Nov 2022 10:15 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#20959

சாலை தடுப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

மற்றவை

வெள்ளகோவில் நகர் பகுதியில் சாலை தடுப்பில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலை தடுப்பில் விளம்பர போஸ்டர் களை ஒட்டியுள்ளனர். இது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 10:12 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#20958

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை

குப்பை

திருப்பூர் வேலன் நகரில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் அருகில் கால்வாய் அமைந்துள்ளதால் குப்பைகள் காற்றில் பறந்து கால்வாய்க்குள் விழுகிறது. இதுபோல் திருப்பூர் மாநகராட்சியில் பல இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ளன. எனவே மாநகராட்சி ஊழியர்கள் விரைவில் குப்பைகளை அப்புறப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 9:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#20723

சுகாதார சீர்கேடு

குப்பை

பனியனுக்கு புகழ் பெற்ற நகரம் திருப்பூர். ஸ்மார்ட் சிட்டி வரிசையில் இடம்பெற உள்ள திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்திற்கு பின்புறம் வாடகை கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கார்களை நிறுத்தும் இடம் உள்ளது. ஆனால் அந்த வழியாக செல்பவர்கள் கார்கள் நிறுத்தும் பகுதியை அசுத்தம் செய்கிறார்கள்.இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதனைப் போக்க மாநகராட்சி நிர்வாகம் சுகதார வளாகம் கட்டித் தரலாம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 9:50 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#20722

சாயும் நிலையில் அறிவிப்பு பலகை

மற்றவை

காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள வட்டமலை பகுதியில் புகழ்பெற்ற முருகன் கோவிலுக்கு செல்லும் வழி குறித்து இந்து அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அறிவிப்பு பலகையை சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 9:44 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#20721

வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் பல்வேறு பொது இடங்களில், காலி இடங்களில் கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு காலை மாலை நேரங்களில் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியவர்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். காற்று மாசுபட்டு சுகாதாரக் கேடு ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 12:14 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#20555

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தெருநாய்கள் தொல்லை திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் ஜோதிநகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் குப்பைகளில் உள்ள கோழிமற்றும் மீன் இறைச்சிகளை கொண்டு வந்து வீடுகள் முன்பு போட்டு விடுகிறது.மேலும் சிறுவர்-சிறுமிகளை கடிக்க துரத்துகிறது.எனவே இந்த தெருநாய்கள் வெறிநாய்களாக மாறும் முன்பு மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பவித்ரா சுரேஷ்,ேஜாதிநகர். 7010537711

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 10:32 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#20082

கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை

கழிவுநீர்

பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பாரியூர் அம்மன்நகரில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் சிறிது மழைபெய்தாலும் வீடுகளில் முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீர் அருகில் உள்ள வீடுகளுக்கும், சாலையிலும் தேங்கி நிற்கிறது. இதனை மிதித்துக்கொண்டு சிறுவர், சிறுமிகளும், பெரியோர்களும் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 10:30 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#20079

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

திருப்பூர் தாராபுரம் ேராடு,கே.செட்டிபாளையம் ஜோதிநகரில் தென்னந்தோப்பு அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. இதனால்கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. மேலும் தெருநாய்களை கோழிக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அருகில் உள்ள குடியிருப்புகளில் கொண்டு போய் போட்டு விடுகிறது. இதனால் அந்த பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை 2 நாட்களுக்கு ஒருமுறையாவது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 10:28 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#20078

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாநகரில் சாலைகளில் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கிடையில் சாலையின் இருபுறமும் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட போக முடியவில்லை. அதுவும் திருப்பூர்-தாராபுரம் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் பலவஞ்சிபாளையம் வேலவன்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 10:26 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#20077

திருச்சி பஸ்களை கோவில்வழியில் இருந்து இயக்க வேண்டும்

மற்றவை

திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் கோவில்வழி சென்று அங்கிருந்து செல்கிறார்கள். அதுபோல் தஞ்சை, திருச்சி, கும்பகோணம், திருவாரூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்ககளையும் கோவில்வழி பஸ்நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 10:25 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#20075

பகலில் ஒளிரும் மின்விளக்கு

மற்றவை

காங்கயம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள மின்விளக்கு பகல் முழுவதும் எரிகிறது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் நிலையில் பிரதான அரசு அலுவலக வளாகத்தில் பகல் முழுவதும் தெருவிளக்கு எரிவதால் மின்கட்டணம் அதிகம் வரும் அல்லவா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி மின் விளக்கை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 10:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#19819

குப்பை நிரம்பி வழியும் சாக்கடை

கழிவுநீர்

திருப்பூர் தாராபுரம் ரோடு-காங்கயம் கிராஸ் ரோடு சந்திப்பு பகுதியில் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பாக செல்லும் கழிவு நீர் கால்வாய் பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளது. இதனால் இந்த கால்வாய் முழுவதும் குப்பை நிரம்பி வழிகின்றது. கால்வாய் மண் மூடி காணப்படுவதால் மழை பெய்யும் நேரத்திலும் இங்கு ரோட்டில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கி விடுகின்றது.இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமப்பட்டனர். எனவே கால்வாயை தூர்வார வேண்டும் .------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick