25 Dec 2022 10:48 AM GMT
#24205
மயானம் செல்லும் வழியில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்
குன்னத்தூர்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
குன்னத்தூர் குளத்து பகுதியில் 2 ஏக்கர் அளவிற்கு மயானத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மயானத்திற்கு செல்லும் இடத்தில் மின் விளக்குகள் மற்றும் சுகாதார வளாகம், ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மர்மநபர்கள் கோழி கழிவுகளை மயானம் செல்லும் சாலையில் வீசி சென்று விடுகிறார்கள். இதனால் அந்த சாலையில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.