Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 July 2022 6:26 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#2150

முரம்பு மண் எடுப்பதை தடுக்க வேண்டும்

முரம்பு மண் எடுப்பதை தடுக்க வேண்டும்மற்றவை

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் பகுதியில் உள்ள ஏரியில் 10-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் முரம்பு மண் எடுக்கப்படுகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விடும். எனவே முரம்பு மண் எடுப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும். -தியாகராஜன், திருவலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 6:23 PM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#1971

சாலையை சரி செய்ய வேண்டும்

சாலையை சரி செய்ய வேண்டும்சாலை

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமம் எம்.ஜி.ஆர்.நகரில் கடந்த 6 ஆண்டுகளாக தார் சாலை அமைத்து தரவில்லை. இதுபற்றி கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சாலை வழியாக செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும். -மணிமாறன், வளையாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 6:19 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1969

சாலையை சரி செய்ய வேண்டும்

சாலையை சரி செய்ய வேண்டும்சாலை

சோளிங்கரை அடுத்த பத்மாபுரம் சாயிபாபா நகர் விரிவு பகுதியில் உள்ள சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ேமாசமாக உள்ளது. அந்தச் சாலையில் சோளிங்கர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு சொந்தமான அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு வசிப்பவர்களும் சென்று வருகின்றனர். பழுதடைந்த சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -க.மாணிக்கவாசு, பத்மாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 6:16 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#1968

சமுதாயக்கூடத்தை திறக்க வேண்டும்

மற்றவை

வேலூர் மாநகராட்சி 41-வது வார்டு கஸ்பா பொன்னி நகரில் உள்ள சமுதாயக்கூடம் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டதாகும். அந்தச் சமுதாயக்கூடம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதை, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வேண்டும். -குமார், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 6:14 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1967

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் தலங்கை ெரயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜபுரம் பள்ளிக்கூட தெருவில் மின்கம்பம் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. இ்ந்த மின்கம்பம், மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ளதால் எந்த நேரத்திலும் உடைந்து கீழே சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும். -மணிகண்டன், கோவிந்தராஜபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 6:12 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#1966

கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

கழிவுநீர்

பேரணாம்பட்டு புத்துக்கோவில் சந்திப்புக்கு அருகில் சாத்கர் ஊராட்சிக்கு உட்பட்ட சிவராஜ்நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதியான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து ெவளியேறும் கழிவுநீர் தெருவிலேேய தேங்கி, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே எங்கள் பகுதியில் அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். -ம.ஆனந்தன், சிவராஜ்நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 6:10 PM GMT
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#1964

குளத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்

குளத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்குப்பை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வாழைப்பந்தல் ரோட்டில் பாறைகுளம் உள்ளது. பையூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்தக் குளத்தில் கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால், குளத்தில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குளத்தைச் சுகாதாரமாகப் பேணிகாக்க வேண்டும், குப்பைக்கொட்டுவதைத் தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -ரமேஷ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 6:02 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1959

நாய்கள் தொல்லை

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் பஸ் நிலையம், புதிய காலனி பகுதி, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை கடிக்க துரத்துவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் பயந்துசெல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களும் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தெரு நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரா.இளவரசன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 6:00 PM GMT
Mr.Ramasamy
#1958

தெரு மையத்தில் உள்ள மின்கம்பத்தால் இடையூறு

மின்சாரம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தலையாம்பள்ளம் கிராமம். அங்குள்ள வடக்குத் தெரு பகுதியில் தெருவின் மையப் பகுதியில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் விவசாய நிலங்களில் இருந்து வீட்டுக்கு தானியங்களை கொண்டு செல்ல, சாமி வீதிஉலா நேரத்தில், சுப விஷேச நாட்களில் வாகனங்கள் வந்து செல்ல இடையூறாக உள்ளது. எனவே மின்வாரியத்துறையினர் தெருவின் மையப் பகுதியில் உள்ள மின்கம்பத்தை மாற்றி வைக்க வேண்டும். -சிவக்குமார், தலையாம்பள்ளம்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 6:39 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#1803

கழிவுநீர் கால்வாயை தூர்வார ேவண்டும்

கழிவுநீர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் வீ.கோட்டா சாலையில் உள்ள புது ஷாப்லைன் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி உள்ளது. அந்தப் பகுதியில் 100 வீடுகளுக்கு மேல் உள்ளன. கழிவுநீர் ஓடாமல் தேங்கி உள்ளதால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும். -ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 6:36 PM GMT
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#1801

காட்சி பொருளான கிராம சேவை மைய கட்டிடம்

காட்சி பொருளான கிராம சேவை மைய கட்டிடம்மற்றவை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மெய்யூர். அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்தும், அது குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்துவதற்கும் ஏதுவாக ரூ.15 லட்சம் மதிப்பில் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலைக்கு செல்லும் அருகில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. அது, கட்டி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அந்தக் கட்டிடத்தை வெறும் காட்சி பொருளாகவே வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு கிராம சேவை மைய கட்டிடத்தை திறந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 6:32 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#1799

நடைபாதையில் இரும்பு தடுப்பு வேலி அகற்றப்படுமா?

நடைபாதையில் இரும்பு தடுப்பு வேலி அகற்றப்படுமா?சாலை

வாலாஜா தாலுகா அலுவலகம் முன்பு மெயின் பஜாரில் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல தடை செய்யும் வகையில் அடுத்தடுத்து 2 இரும்பு தடுப்பு வேலிகள் போடப்பட்டுள்ளன. அம்மா உணவகம் கட்டப்படும்போது கட்டிடத்தின் இருபுறமும் இந்த இரும்பு தடுப்பு வேலி போடப்பட்டன. இதனால் பல வருடங்களாக மக்கள் நடை பாதையை உபயோகப்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. வாலாஜா நகராட்சி அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அகற்றுவார்களா? -அழகியசிங்கர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick