Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 May 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32502

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக அண்ணா சிலை பகுதியிலிருந்து காமராஜர் சிலை பகுதி வரை உள்ள சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தனபால், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32501

சமூக விரோதிகளின் கூடாரம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மின்னக்கல் பிரிவு சாலையில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தை அப்பகுதியில் உள்ள மது கடைக்கு வரும் மதுபிரியர்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த நிழற்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிழற்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.-சந்திரன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32500

சாலையில் தேங்கும் மழைநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியில் இருந்து கட்டபொம்மன் நகர் வழியாக அண்ணா நகருக்கு செல்ல குறுக்கு சாலை உள்ளது. இந்த சாலையில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அந்த சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ராகவன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:36 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32499

இரவு நேரங்களில் பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் பகல் நேரத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இரவு நேரங்களில் இயக்கப்படுவதில்லை. இதனால் இரவு 9 மணிக்கு மேல் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதிகளில் இருந்து மெணசி, மருக்காலம்பட்டி, ஆலாபுரம், மோளையானூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பஸ் நிலையங்களில் காத்து கிடக்கின்றனர். எனவே இரவு நேரங்களில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆனந்த், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:35 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32498

புறநகர் பஸ்கள் வந்து செல்லுமா?

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தை உள்ளது. இங்கு நகர பஸ்கள் மட்டுமே வந்து செல்கிறது. இதனால் புறநகர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் போதிய பஸ் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே இந்த பகுதிக்கு புறநகர் பஸ்கள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சதீஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32497

பழுதடைந்த ஆழ்துளை குழாய்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா ஜெர்தலாவ் ஊராட்சியில் உள்ள செங்கோடப்பட்டி பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள குடிநீர் தொட்டி மற்றும் ஆழ்துளை குழாய் பழுதாகி நீண்ட நாட்களாக பயன்பாடின்றி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே பழுதடைந்த ஆழ்துளை குழாய் மற்றும் குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தினேஷ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:33 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32496

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 4 ரோடு மைய பகுதியில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனம் சாலையில் செல்லும் போது சாலை செல்லும் பொதுமக்கள் மீது தேங்கி நிற்கும் மழை நீர் மேலே விழுகின்றது. வாகன ஓட்டிகள் அவதி கின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சங்கர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:33 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32495

ஆபத்தான மரம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி பழமையான புளிய மரங்கள் ஏராளமாக உள்ளன. இவை எந்த நேரத்திலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு பழமையான மரங்களை உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சிவா, மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:30 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32493

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலப்பள்ளியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இதனால் தினமும் ஏராளமான வாகனங்கள் மார்க்கெட்டுக்குள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் மார்க்கெட்டின் எதிரே உள்ள சர்வீஸ் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இங்கு வந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாதேஷ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:29 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32491

கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

கழிவுநீர்

ஓசூர் மாநகராட்சியில் 5 மற்றும் 6-வது வார்டுக்கு உட்பட்ட இயற்கை நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சீத்தாராமன், இயற்கை நகர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:29 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32490

தண்ணீரை வெளியேற்ற வேண்டும்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து ஒப்பதவாடி செல்லும் சாலையில் சின்ன பர்கூர் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் மழை பெய்தால் 3 முதல் 4 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சில சமயங்களில் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பழனி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#32297

சேதமடைந்த சாலை

சாலை

சேலம் அம்மாபேட்டை ரவுண்டானாவில் இருந்து பட்டக்கோவில் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை சரியாக சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ஜெகதீஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick