10 May 2023 5:33 PM GMT
#32495
ஆபத்தான மரம்
கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி பழமையான புளிய மரங்கள் ஏராளமாக உள்ளன. இவை எந்த நேரத்திலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு பழமையான மரங்களை உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சிவா, மத்தூர், கிருஷ்ணகிரி.