Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 May 2023 5:37 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#32296

பயணிகள் நிழற்கூடம்

போக்குவரத்து

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள நிழற்கூடம் சிறியதாக உள்ளது. மேலும் இருக்கைகளும் போதுமான எண்ணிக்கை இல்லை. தற்போது வெயில் காலம் என்பதால் பயணிகள் வெயிலில் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பயணிகள் நிழற்கூடத்தை கூடுதல் இருக்கைகள் அமைத்து விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?-பக்தவச்சலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:37 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#32295

குப்பை தொட்டி வைக்க கோரிக்கை

குப்பை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் 22-வது வார்டு அம்பேத்கர் நகரில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு குப்பை தொட்டி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-செல்வம், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#32294

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

சேலம் 33-வது வார்டு அம்மாபேட்டை மண்டல தீர்த்தகிரி ரோடு அருகில் சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட குழி பணி நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது அங்கு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செயதிக்கு உதவிய 'தினத்தந்தி' க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.-ரத்தினம் விஸ்வா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32293

ஆபத்தான மரம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து சர்க்கரை ஆலை செல்லும் வழியில், கிராயூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் முன்புறம் சாலையோர புளியமரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் வேரோடு சாய்ந்து விட்டது. இதுவரை அந்த புளியமரம் அப்புறப்படுத்தாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இந்த புளிய மரத்தை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேஸ், மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32292

சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தாலுகா ஆலம்பட்டி பகுதியில் இருந்து மேட்டு மிஷின் செல்லும் சாலையில் சாக்கடை நீர் செல்வதற்கு போதிய வடிகால் வசதி இல்லை. மழை காலங்களில் கழிவுநீர் வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து வீடுகிறது. மேலும் ஆலம்பட்டி ஊர் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் செல்வதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?-ரவி, வெண்ணந்தூர்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32291

கிணற்றுக்கு சுற்றுச்சுவர்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பொம்மசமுத்திரம் ஊராட்சியில் சக்திநகர் பகுதியில் கிணறு உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் அந்த கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இன்று வரை அதனை சீரமைக்கவில்லை. அந்த வழியே வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த கிணற்றுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.-சுந்தரம், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:30 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32290

தாமதமாகும் சாக்கடை கால்வாய் பணி

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி முதல் அதிகாரப்பட்டி வரை சாலை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பேரூராட்சி பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் கழிவுநீர் நீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால் இப்பணி தாமதமாக நடந்து வருவதால் கழிவு நீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.-ராஜாராம், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32289

தெருவிளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சோமனஅள்ளியில் இருந்து கரகதஅள்ளி செல்லும் சாலையில் அருந்ததியர் காலனி உள்ளது. இந்த பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா ?-பிரவீன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32288

புற நோயாளிகள் பிரிவு கட்டிடம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடம் பற்றாக்குறையினால் புதிதாக புற நோயாளிகளின் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் திறக்கப்படாததால் நோயாளிகள் இடப்பற்றாகுறையால் சிரமப்படுகின்றனர். எனவே புதிய புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?-சாய் முரளி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:28 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32287

கழிப்பிடம் அமைக்க கோரிக்கை

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பஸ் நிலையம் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பஸ் நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் கழிப்பிட வசதி இல்லை. இதனால் பெண்களும், பொதுமக்களும், கழிப்பிட வசதி இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவிகளும் சிறுநீர் கழிக்க கூட எவ்வித வசதியும் இல்லாமல் அவதியடைகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் கழிப்பிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பழனிவேல், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32286

தார்ச்சாலை அமைக்க கோரிக்கை (

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா மாரண்டபள்ளி ஊராட்சி சித்தாண்டபள்ளி பள்ளம் கிராமத்தில் 40 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் மண் சாலையை உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும்.-.சீனிவாசன், சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 5:26 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32285

சேறும், சகதியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே எமகல்நத்தம் கிராமத்தில் மழைக்காலங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளது. இந்த சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். இச்சாலையின் இருபுறமும் உள்ள வீடுகளுக்கு நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தோஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick