Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Jun 2023 5:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34546

கெடிகாரம் வைக்கலாமே!

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி பஸ் நிலையத்தில் நீண்ட நாட்களாக கெடிகாரம் இல்லை. இதனால் சிலசமயங்களில் பஸ் நிலையத்தில் பயணிகள் ெகடிகாரம் இல்லாததால் நேரம் தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் கெடிகாரம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ் நிலையம் வரும் பயணிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.-நாராயணசாமி, மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34544

பழுதடைந்த மின்விளக்குகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பில்லப்பநாயக்கனஅள்ளி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு உயர்கோபுரமின்விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது இந்த மின்விளக்குகள் பழுதடைந்து விட்டது. இதனால் அப்பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மணி, பில்லப்பநாயக்கனஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34543

செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நகர் பகுதியில் கடந்த காலங்களில் குற்ற சம்பவங்கள் அதிகரித்தது. இதனை தடுக்க பென்னாகரத்தின் பிரதான பகுதிகளில் போலீசார் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். ஆனால் காலப்போக்கில் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்காததால் பெரும்பான்மையான கேமராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளது. இதனால் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளன. எனவே செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?-கோபி, பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34542

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் சேலம் ரோடு, சப் ஜெயில் ரோடு ஆகிய சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்த சாலையில் உள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் இருசக்கரம், கனரக வாகனங்களை சாலையின் நடுவே ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ஷாஜகான், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34541

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆர்.கே.ரோடு ஹட்கோ குடியிருப்பு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியின் பல்வேறு இடங்களில் சாக்கடைகள் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சில தெருக்களில் கழிவுநீர் சாலையிலேயே வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வாரநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- பழனி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34539

மீண்டும் பஸ்களை இயக்க கோரிக்கை

போக்குவரத்து

பர்கூர் பஸ் நிலையத்திற்கு கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்தும் திருப்பத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்தும் சுமார் 30 நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக கொரோனா காலங்களில் திருப்பத்தூரில் இருந்து பர்கூருக்கு இயக்கப்பட்டு வந்த வழித்தட எண்கள் டி12 மற்றும் 31 ஆகிய நகர பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் இந்த பஸ்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34538

விபத்து ஏற்படும் அபாயம்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. அதேசமயம் மத்தூர் ஊருக்குள் வந்து போகும் சாலையில் இருபுறமும் சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்பட்டு சிமெண்டு பலகைகளால் மூடப்பட்டது. அவ்வாறு மூடப்பட்ட சிமெண்டு பலகைகளின் இருபுறமும் சாக்கடை சந்துகளிலும் மண் கொண்டு நிரப்பப்படாமல் விட்டுவிட்டனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை பலகைகளை சரியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 5:00 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34315

சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. அங்குள்ள ஒரு கழிவு நீர் கால்வாய் மூடாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த வாய்க்காலை மூடி போட்டு மூடவேண்டும்.-குணசேகரன், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 5:00 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34314

வேகத்தடை அமைக்கலாமே!

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் இருந்து பொன்குறிச்சி வரை பைபாஸ் சாலை போடப்பட்டுள்ளது. இந்த பைபாஸ் சாலை ராசிபுரம்-திருச்செங்கோடு பிரதான சாலையில் பொன்குறிச்சி என்ற இடத்தில் இணைகிறது. இந்த பைபாஸ் சாலையில் வாகனங்கள் திரும்பும் போதும் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே திருச்செங்கோடு-ராசிபுரம் சாலையில் பொன்குறிச்சியில் பைபாஸ் சாலை இணையும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் தடுப்புகள் வைக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:59 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34312

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலைய ரோட்டில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தூண்கள் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சங்ககிரி சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாக சாலையில் ஓடுகிறது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே தாமதமாக நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:58 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#34311

மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை

மின்சாரம்

சேலம் சூரமங்கலத்தில் இருந்து அண்ணா நகர், ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் போடிநாயக்கன்பட்டி ஏரி உள்ளது. ஏரிக்கரை சாலை வழியாக தான் இந்த பகுதிகளுக்கு செல்ல முடியும். இந்த சாலையில் போதுமான மின்விளக்கு வசதி இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த சாலைகளில் விஷ பூச்சிகள், பாம்பு நடமாட்டம் உள்ளன. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#34310

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தண்ணீர்

சேலம் வட்டமுத்தாம்பட்டி ஊராட்சி, எம்.ஜி.ஆர். நகரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 5 ரூபாய் நாணயம் செலுத்தி குடிநீர் பிடிக்கும் வகையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்றுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.-ராஜேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick